Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா…. ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை…. மதுரையில் பரபரப்பு…!!

ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள தேனூர் கிராமத்தில் ஜோதிமுத்து(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். தற்போது ஜோதிமுத்து சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோவிலில் இரவு காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது ஜோதிமுத்து நிகழ்ச்சி முடிந்த பிறகு வைகை ஆற்று பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு மதுபோதையில் இருந்த சிலர் ஜோதிமுத்துவிடம் இருந்த பணத்தை பறிப்பதற்கு முயற்சி செய்தனர்.

ஆனால் பணத்தை பறிக்க விடாமல் ஜோதிமுத்து தடுத்ததால் கோபமடைந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அவரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து படுகாயமடைந்த ஜோதி முத்துவை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |