Categories
ஆன்மிகம் திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கொடியேற்றத்துடன் தொடங்கிய புரட்டாசி மாத விழா…. எந்த கோவில் தெரியுமா….?? திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை அருகே அக்ராவரம் கிராமத்தில் மலை மீது சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றுள்ளது.

அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ஆம் தேதி வரை தொடர்ந்து 5 சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் நடைபெற உள்ளது. நேற்று நடைபெற்ற விழாவில் நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர், வாணியம்பாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..

Categories

Tech |