Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொடியேற்றத்துடம் தொடங்கிய திருவிழா…. நடைபெறும் நிகழ்ச்சிகள் ….!!….!!

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  ராஜபாளையம்- தென்காசி சாலையில் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர் வெங்கட்ராம ராஜா சொந்தமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் மாசி மகம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று கொடியேற்றத்துடம்  திருவிழா தொடங்கியுள்ளது.

இந்நிலையில் 10  நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், தெப்ப தேரோட்டம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் சாமிக்கு அலங்கார தேரோட்டம், சப்பரத்தில் திருவீதி உலா  போன்ற நிகழ்ச்சிகள்   நடைபெறும். இதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்   என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |