கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம் மேலும் அணையில் இருந்து அருவி போல ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வர்.
கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்குள்ள பாலத்தில் நின்று அணையின் அழகை பார்த்து ரசித்தனர்.