Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொடி முடி ஒன்றியக்குழு கூட்டம்… கையொப்பமிட்டதை காட்டுங்க… முடியாதுன்னு சொன்ன அதிகாரி… கவுன்சிலர்கள் வெளிநடப்பு..!!

கொடிமுடி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் அதிகாரியை கண்டித்து கவுன்சிலர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், கொடிமுடி ஊராட்சி ஒன்றியக் குழுவின் அவசர கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றபோது ஒன்றியக் குழுத் தலைவர் லட்சுமி ராஜேந்திரன் தலைமை வகித்த நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர் சுமித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமநாதன், ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும்  ஒன்றிய குழு தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்தின் தீர்மானங்கள் மன்ற அங்கீகாரம் பெறுவதற்காக படிக்கப்பட்டுள்ளது.

அதில் ஒன்றிய செலவினங்கள் குறித்து படிக்கப்படும் போது அதற்குரிய ஆவணத்தை மன்றத்தில் காண்பிக்குமாறு 1 வது வார்டு கவுன்சிலர் தீ. பழனிசாமி ஒன்றிய குழு தலைவர் மூலமாக வட்டார வளர்ச்சி அலுவலர் சுமித்ராவிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சுமித்ராவின் கையொப்பம் இல்லாத ஜெராக்ஸ் பேப்பர் கொடுத்தனர். இது குறித்து கையொப்பமிட்டதை காட்டுமாறு கூறினார்கள்.

அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சுமித்ரா எனது மேலதிகாரிக்கு தான் கையொப்பமிட்டதை கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து 1வது வார்டு கவுன்சிலர் தீ.பழனிசாமி, இரண்டாவது வார்டு கவுன்சிலர் எம்.ஏ. பழனிச்சாமி, நாலாவது வார்டு கவுன்சிலர் பரமசிவம்,மற்றும் ஒன்றியக்குழு தலைவர் லட்சுமி ராஜேந்திரன் ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுமித்ராவை தட்டிக்கேட்டு விட்டு கூட்ட அரங்கில் இருந்து வெளியே சென்றுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்துள்ளனர். ஒன்றியக்குழு தலைவர் லட்சுமி ராஜேந்திரன் உட்பட கவுன்சிலர் 4 பேரும் கொடுத்த மனுவில் குறிப்பிடபட்டுள்ளதாவது, வட்டார வளர்ச்சி அலுவலர் மன்ற கூட்டத்தில் கவுன்சிலர் கேட்ககும் ஆவணங்களை காட்ட முடியாது என மறுக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |