கொடுக்கல் வாங்கல் தகராறில் தம்பி அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேல் அச்சமங்கலம் பகுதியில் ஜெயராமன்(66) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோவிந்தராஜ் (54) என்ற தம்பி உள்ளார். இந்நிலையில் அண்ணன் தம்பிக்கு இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கடந்த 17-ஆம் தேதி கோவிந்தராஜ் கடைக்கு சென்று கொண்டிருந்த தனது அண்ணி ஜெயலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த ஜெயராமன் கோவிந்தராஜை தட்டி கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த கோவிந்தராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயராமனை சரமாரியாக குற்றியுள்ளார். இதனை தடுக்க வந்த ஜெயலட்சுமிக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராமன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் கோவிந்தராஜை தேடி வருகின்றனர்.