கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கரை அருகே உள்ள ரெண்டாடி கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் பிரகாசுக்கும், சீனிவாசனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனிவாசன் தனது நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டோர் உதவியுடன் பிரகாசை பலமாக தாக்கியுள்ளனர்.
இதில் ஆத்திரம் அடைந்த சீனிவாசன், பிரகாசை கத்தியால் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பிரகாசை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து சோளிங்கரை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பூங்கொடி, ராஜேஷ், மாதவன், சேகர் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் சீனிவாசன் உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.