லக்கி ஃபார் லைஃப் என்றொரு அதிர்ஷ்டப் போட்டி அமெரிக்காவில் உண்டு. இதில் பல மாதங்களாக ஒரே நம்பர்களுடன் விளையாடினார் மிச்சிகனைச் சேர்ந்த நபர். கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பதுபோல் அந்த நபருக்கு ஆண்டுக்கு 25,000 டாலர் என்ற வாழ்நாள் முழுமைக்குமான லக்கி ஃபார் லைஃப் லாட்டரி அடித்துள்ளது.
அவர் பெயர் ஸ்காட் சிண்டர்( 55).ஒரு கேஸ் நிரப்பும் மையத்தில் தான் இந்த விளையாட்டை விளையாண்டிருக்கிறார். ஆகஸ்ட் 7 ஆம் தேதி அவர் இந்த விளையாட்டை விளையாடினார் அப்போது அவருக்கு 07-12-31-37-44 என்ற அதிர்ஷ்ட எண்கள் பொருந்திப் போயின. இது குறித்து சிண்டர் கூறுகையில் நான் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்த விளையாட்டை இதே நம்பர்களுடன் விளையாடி வருகிறேன். அப்படி ஒரு கேஸ் ஸ்டேஷனில் ஆகஸ்ட் 7ல் விளையாடிய போதுதான் எனக்கு லக்கி ஃபார் லைஃப் லாட்டரி அடித்தது என்று உற்சாகமாகக் கூறுகிறார்.