Categories
மாநில செய்திகள்

கொடுக்க மனம் இருக்கு…. ஆனா பணம் இல்லையே…. சொல்கிறார் அமைச்சர் சிவசங்கர்….!!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், தமிழக போக்குவரத்து துறை என்றாலே கலைஞர் கருணாநிதி தான் நினைவுக்கு வருவார். அதற்கு காரணம் போக்குவரத்தை அரசுடைமை ஆக்கியது அவர்தான். மற்ற மாநிலங்களில் நகரங்களில் மட்டும் தான் போக்குவரத்து வசதி உள்ளது. கிராமப்புறங்களில் கிடையாது. தமிழகத்தில் தான் அனைத்து கிராமங்களுக்கும் போக்குவரத்து சேவை உள்ளது. இதனால் கிராமத்தில் உள்ளவர்கள் நகரத்திற்கு வந்து கல்வி கற்கவும் தொழில் செய்யவும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக கிராமப்புற மக்களுடைய வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது.

போக்குவரத்து ஊழியர்கள் விழா காலங்களில் கூட பணியாற்றுகிறார்கள் அவர்களுடைய கஷ்டத்தை யாரும் கண்டு கொள்வதில்லை. அவர்களை காக்கும் போக்குவரத்து கழகத்திற்கு உள்ளது. போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஒரு கோரிக்கை தவிர மற்ற அனைத்திற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக்காலத்தில் சீர்குலைக்கப்பட்ட ஊதிய ஒப்பந்தம் இந்த ஆட்சியில் சரி செய்யப்பட்டுள்ளது. இன்னும் அதிக பணம் கொடுக்க வேண்டும் என்ற மனம் இருக்கிறது. ஆனால் நம்மிடம் பணம் இல்லை. இருந்தபோதும் இயன்ற அளவுக்கு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளோம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |