தேனியில் கடனை திருப்பி கேட்டதால், இரும்பு கம்பியால் 3 பேர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் செஞ்சியில் கௌசல்யா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் கடந்த 3 ஆண்டுக்கு முன்பாக தனது உறவினரான பரத்பாண்டி என்பவர் தொழில் தொடங்குவதற்காக கடனாக பணம் கேட்டுள்ளார். இதனால் கௌசல்யா அவரது உறவினரிடமிருந்து 27,00,000 ரூபாயை வாங்கி பரத் பாண்டிக்கு கடனாக கொடுத்துள்ளார். இதற்கிடையே கௌசல்யா தனது பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார்.
ஆனால் அவர் திருப்பிக் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்திருக்கிறார். இதனையடுத்து கௌசல்யா, அவரது கணவர் மற்றும் தாய் ஆகிய மூவரும் கடந்த 10 ஆம் தேதி சென்று பாண்டியிடம் தங்களது பணத்தை திருப்பித் கேட்டுள்ளனர். அப்போது பரத் பாண்டியுடன், 4 பேர் சேர்ந்து பணம் கேட்டு வந்த மூவரையும் இரும்பு கம்பியால் பலமாக தாக்கியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து கௌசல்யா தேனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் பாண்டி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.