மூன்று பெண்களை திருமணம் செய்துள்ள நபர் நான்காவது திருமணத்திற்கு பெண் தேடும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் சியால்கோட் என்ற பகுதியில் வசித்து வருபவர் அட்னான்(20). இவருக்கு ஏற்கனவே மூன்று மனைவிகள் இருக்கும் நிலையில் தற்போது நான்காவது திருமணம் செய்ய பெண் தேடி வருகிறார். இதில் அவர் மட்டுமின்றி அவர்களை மூன்று மனைவிகளும் சேர்ந்து தன் கணவருக்காக பெண் தேடி வருகின்றனர் என்று கூறப்படுகிறது. தன்னுடைய பதினாறு வயதில் முதல் திருமணம் செய்துகொண்ட அட்னான் அதன் பின்னர் சுமார் 3 வருடங்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதையடுத்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்னால் மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார்.
இவர் திருமணம் செய்துள்ள பெண்களின் பெயர்கள் ஷோம்பல், ஷபானா, ஷாகிதா ஆகும். இந்த மூன்று பெண்களின் பெயரும் S என்ற எழுத்தில் ஆரம்பிப்பதால் அதே எழுத்தில் பெயர் ஆரம்பிக்கும் நான்காவது பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அட்னான் கூறுகையில், “எனக்கு குடும்பம் நடத்த மாதத்திற்கு 1 முதல் 1.15 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். எனக்கு மூன்று மனைவிகள் இருப்பதால் அவர்கள் மாறிமாறி அடிக்கடி என்னுடன் சண்டை போடுவார்கள் என்று நினைக்கலாம். ஆனால் மூன்று மனைவிகளிடமும் நான் போதுமான கவனத்தைச் செலுத்தவில்லை என்பது தான் அவர்களின் பிரச்சினை” என்று கூறியுள்ளார். அதேபோல அந்த 3 மனைவிகளும் தங்களுக்கு சமமாக நேரம் பிரித்து அட்னானை மாறி மாறி கவனித்து வருவதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.