உத்திரப்பிரதேச மாநிலத்தில் 32 வயது பெண்ணை 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் 5 மாதத்திற்கு முன்பு 32 வயது பெண்ணை ஆறு பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்களில் 5 பேர் சிறுவர்கள். அவர்கள் செய்த கொடுமையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ அதிக அளவில் பகிரபட்டதை அடுத்து அந்தப் பெண் நேற்று புகார் அளித்துள்ளார்.