Categories
தேசிய செய்திகள்

கொடுமையின் உச்சம்…. 5 வருசமா வேண்டி பிறந்த…. “பெண் குழந்தை” தூங்குவது போல் நடித்து தந்தை செய்த செயல்…!!

பெண் குழந்தை பிறந்ததால் ஒரே நாளில் குழந்தையின் கழுத்தில் மிதித்து தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஹரியானாவில் உள்ள யமுனா நகரை சேர்ந்தவர்கள் நீரஜ்-வர்ஷா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் தம்பதியினர் பார்க்காத மருத்துவம் இல்லை போகாத கோவில் இல்லை. இந்நிலையில் சென்ற வருடம் வர்ஷா கர்ப்பமாகியுள்ளார். இதனால் மிகுந்த சந்தோசம் கொண்ட நீரஜ் தனது மனைவியை கண்ணும் கருத்துமாக மிகுந்த பாசத்துடன் பார்த்துக்கொண்டார்.

பின்னர் பத்து மாதம் கழித்து கடந்த வாரம் வர்ஷாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனை அறிந்த நீரஜ் தனக்கு பெண் குழந்தை பிறந்ததா என்று மனமுடைந்து போனார். ஆண் குழந்தை பிறக்கும் என்று நினைத்திருந்த நீரஜ்க்கு இது பெரும் ஏமாற்றமாக இருந்தது. இதனால் அந்த குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து ஒரு நாள் நன்றாக மது அருந்திவிட்டு பிறந்த ஆறு நாட்களே ஆன குழந்தையின் அருகே தூங்குவது போல் படுத்து நடித்துள்ளார்.

அதன்பிறகு பிஞ்சு குழந்தை என்றும் பாராமல் காலால் குழந்தையின் கழுத்தில் மிதித்து மூச்சுத் திணறத் திணற குழந்தையை கொலை செய்தார். பின்னர் குழந்தை இறந்து கிடந்ததை பார்த்த வர்ஷா நீரஜ் மீது காவல் நிலையத்தில் தனது குழந்தையை கொலை செய்துவிட்டதாக புகார் கொடுத்தார். வழக்கு பதிந்த காவல்துறையினர் நீரஜிடம் விசாரணை மேற்கொண்டபோது தான் செய்த தவறை ஒப்புக்கொண்டார். பின்னர் காவல்துறையினர் கொலை வழக்காக மாற்றி அவரை கைது செய்தனர்.

 

Categories

Tech |