Categories
தேசிய செய்திகள்

கொடுமை எல்லை மீறி விட்டது…. அரசு அக்கறை காட்டவில்லை…. ராகுல் காந்தி…!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி வரும் 26ம் தேதியுடன் ஒரு வருடம் முடிவடைகிறது. எனினும் இதுவரை விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், விவசாயிகளின் பெயருக்கு முன்னால் தியாகி என்று குறிப்பிட வேண்டியுள்ளது வந்துவிட்டது. இது மோடி அரசின் கொடுமை எல்லை மீறிவிட்டது என்பதை நமக்கு காட்டுகிறது. நமக்கு உணவு வழங்கும் விவசாயிகளின் சத்தியாகிரகத்திற்கு வணக்கம் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |