மராட்டிய மாநிலம் சட்டாரா பகுதியை சேர்ந்தவர் சிந்து சனாப். இவர் ஒரு வனச்சரக பெண் அதிகாரியாக காட்காவன் காவல் வனப்பகுதியில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் 3 மாதம் கர்ப்பிணியாக இருக்கிறார். இவர் பணி முடிந்து வரும் போது, இவரை கணவன் மற்றும் மனைவி என்று 2 பேர் பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதுபற்றி வனச்சரக பெண் அதிகாரி கூறுகையில், பணியில் சேர்ந்ததிலிருந்தே அந்த நபர் என்னை மிரட்டியும், பணம் கேட்டும் தொந்தரவு செய்து வந்துள்ளார். அதற்கு நான் அடிபணியவில்லை.
இதையடுத்து நான் பணிமுடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் போது, என்னை அவர்கள் அடித்தனர். என்னுடைய கணவரை காலணிகளால் தாக்கினர் என்று கூறியுள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராமச்சந்திர ஜான்கர் முன்னாள் பஞ்சாயத்து தலைவராகவும், உள்ளூர் வன குழு உறுப்பினராகவும் இருக்கின்றார். இந்த சம்பவத்தினால் ராமச்சந்திரன் ஜான்கர் மற்றும் அவரது மனைவி பிரதீபா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.