Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சகட்டம்…. 3 வயது குழந்தை…. தந்தை பாட்டி உட்பட 5 பேர் கைது….!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு பெண் தனது கணவர், மாமியார் உள்பட 5 பேர் மீது ஒரு பரபரப்பான புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் எனது கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். எனக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் எனது கணவருக்கும், எனது சகோதரனின் மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் நிலவிவருகிறது. எனவே அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, நெருக்கமாக பழகி வருகின்றனர். இது பற்றி எனக்கு தெரியவந்ததும், எனது கணவருடன் சண்டை போட்டேன். ஆனால் எனது மாமியார் எனது கணவருக்கு சாதகமாக பேசுகிறார்.

இதையடுத்து எனது சகோதரனால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது எனவும், அதனால் சகோதரனின் மனைவி குழந்தை பெற்றுக்கொள்ள எனது மகன் உதவி செய்கிறான் எனவும் என்னுடைய மாமியார் கூறுகிறார். அவர் கூறியதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால், எனது கணவர் மாமியார் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் என்னை வரதட்சணை வாங்கி தரும்படி தொல்லை கொடுத்து வருகின்றனர். தொடர்ந்து என் கணவர் கண் முன்னே எனக்கு பாலியல் வன்கொடுமை கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து எனது 3 வயது மகனுக்கு எனது கணவர், மாமியார் ஆகியோர் சேர்ந்து பால் பாட்டிலில் பாலுக்கு பதிலாக மதுபானத்தை ஊற்றி வலுக்கட்டாயமாக குடிக்க வைத்து வருகின்றனர். இதை தடுக்க முயன்ற என்னையும் அடித்து துன்புறுத்துகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பெண்ணின் கணவர் மாமியார் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |