டெல்லியில் உள்ள கஸ்தூர்பா என்ற நகரில் குடியரசு நாளான நேற்று 20 வயது இளம்பெண்ணை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. மேலும் அந்த கும்பல் இளம்பெண்ணின் தலைமுடியை வெட்டி அவருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அக்கம்பக்கத்தினர் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். மேலும் அந்தப் பெண்ணுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். சிலர் அந்த இளம்பெண்ணை பயங்கரமாக அடிக்கும் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
कस्तूरबा नगर में 20 साल की लड़की का अवैध शराब बेचने वालों द्वारा गैंगरेप किया गया, उसे गंजा कर, चप्पल की माला पहना पूरे इलाक़े में मुँह काला करके घुमाया। मैं दिल्ली पुलिस को नोटिस जारी कर रही हूँ। सब अपराधी आदमी औरतों को अरेस्ट किया जाए और लड़की और उसके परिवार को सुरक्षा दी जाए। pic.twitter.com/4ExXufDaO3
— Swati Maliwal (@SwatiJaiHind) January 27, 2022
இதுகுறித்து தனது இணைய பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மலிவால், “இந்த கொடூர சம்பவத்தை செய்த அனைவரும் தண்டனை வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக டெல்லி காவல் துறைக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்புகிறேன்” என்று கூறியுள்ளார். அதேபோல் இந்த கொடூர சம்பவத்தை செய்தவர்கள் அனைவரும் கள்ளச்சாராயம் விற்பவர்கள் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.