ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜாஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக நிலப்பகுதி ஒன்றிற்கு சென்றுள்ளார். இதனை கவனித்த அதே பகுதியை சேர்ந்த பாகர் (30) என்பவர் சிறுமியை பின்தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் தான் வைத்து இருந்த கோடாரியால் சிறுமியை தாக்கி அவரது தலையை துண்டாக வெட்டி எடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வெட்டிய தலை ஒரு கையிலும் கோடாரி மற்றொரு கையிலுமாக அப்பகுதி முழுவதையும் சுற்றி வந்துள்ளார்.
இதனை பார்த்த மக்கள் பயந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்ததில் குடிப்பழக்கம் உடைய பாகர்-க்கும் சிறுமியின் குடும்பத்தினருக்கும் எந்த முன் விரோதமும் இல்லை என்பது தெரிய வந்ததோடு எதற்காக சிறுமியை கொடூரமாக கொலை செய்தார் என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. சிறுமியின் தந்தை புகார் அளித்ததை தொடர்ந்து ஐபிசி 302 201 மற்றும் 34 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.