அரிய வகை உயிரினமான டால்பினை அடித்து துன்புறுத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உலக அளவில் அரிதான உயிரினமாக கருதப்படும் கங்கை நதி டால்பின் உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் கும்பல் கோடாரி மற்றும் கட்டையால் தாக்கி கொன்று உள்ள வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மட்டுமே தென்படக்கூடிய டால்பின் வகைகளில் ஒன்றுதான் கங்கை நதி டால்பின். இதனுடைய மற்றொரு பிரிவு சிந்துநதி டால்பின் என குறிப்பிடப்படுகிறது.
உயிரினங்களில் மிகவும் அரிதானதாகக் கருதப்படும் இவை எந்த உயிருக்கும் தீங்கிழைக்காத ஒன்று. இந்நிலையில் உத்தர பிரதேசத்திலுள்ள பிரதாப்கர் பகுதியில் இந்த டால்பின் ஆற்று கால்வாய்கள் காணப்பட்டுள்ளது. இதனை பார்த்த எட்டுக்கும் அதிகமான இளைஞர்கள் கட்டை மற்றும் கோடாரியால் கடுமையாகத் தாக்கி அதை கொன்றுள்ளனர்.
கால்வாய் ஓரமாக டால்பின் இறந்து கிடக்கிறது என வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் விசாரிக்கையில் எந்த தகவலும் வெளிவராமல் இருந்துள்ளது. இந்நிலையில்தான் டால்பினை கொடூரமாக கொன்ற காணொளி வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
Such a disturbing video shared by @alok_pandey A Gangetic dolphin being brutally beaten by a group of men! It’s such a rare and gentle creature, and even so, this level of brutality against any living thing is horrific. #pratapgarh #dolphin pic.twitter.com/Mqp9rkRP17
— Gargi Rawat (@GargiRawat) January 8, 2021