Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சம்…. 16 மாத பெண் குழந்தையை…. தந்தை செய்த கொடூர செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து குஜராத்தின் ராஜ்கோட் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் கணவன் மனைவி கைக்குழந்தையுடன் பயணம் செய்துள்ளனர். அந்த குழந்தை ரொம்ப நேரமாக எந்த வித அசைவு இல்லாமல் இருந்துள்ளது. இதனால் அந்த தம்பதியர் மீது மற்ற பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்தனர். உடனே அவர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து மகாராஷ்டிர மாநிலம் சோலப்பூர் ரயில் நிலையத்தை அடைந்ததும் குழந்தையுடன் தம்பதியினரை கீழே இறக்கினர். குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தை இறந்து ரொம்ப நேரமானது என்று தெரியவந்தது.

இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது, பிறந்து 16 மாதங்ளே ஆன பெண் குழந்தையை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பெற்ற குழந்தை என்று பாராமல் குழந்தையின் தந்தை இந்த கொடூர செயலை செய்துள்ளார். அதற்கு தாயும் உடந்தையாக இருந்துள்ளார். அதன் பிறகு குழந்தையின் உடலை யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்று சொந்த ஊரில் அடக்கம் செய்யும் நோக்கத்தில் ரயிலில் பயணம் செய்த போது சிக்கி உள்ளனர். எனவே கணவன்-மனைவி இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |