Categories
தேசிய செய்திகள்

கொடூரமாக கொல்லப்படும் நாய்கள்!…. இதுதான் காரணமா?…. வருத்தம் தெரிவித்த கிரிக்கெட் வீரர்….!!!!

கேரள மாநிலத்தில் அண்மை காலமாக தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது. அதாவது நடந்து செல்பவர்கள் மட்டுமின்றி, வாகனங்களில் செல்வோரையும் விரட்டிகடிக்கிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்ய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாநிலஅரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மற்றும் ரேபிஸ் வைரஸ் தொற்றுள்ள நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் தெரு நாய்களுக்கு உணவு கொடுப்பவரே, அதனால் கடிபடும் நபருக்கான மருத்துவச் செலவை ஏற்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

கேரளாவில் இந்த வருடத்தில் இதுவரையிலும் 1 லட்சம் பேர் தெரு நாய்களால் கடிபட்டுள்ளனர் என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மாநில அரசின் தகவலின் படி 2022-ல் இதுவரையிலும் கேரளாவில் 21 பேர் வெறி நாய்க்கடியால் இறந்துள்ளனர். அவர்களில் பாதிக்கப்பட்ட 5 பேர், அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி ரேபிஸ் தடுப்பூசியை எடுத்துக்கொண்டனர். அம்மாநிலத்தில் வெறிநாய்க் கடிக்கு எதிரான தடுப்பூசிகள் பயனற்றதாக மாறிவருகிறது. இது பற்றி அண்மைய காலமாக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இதன் காரணமாக கேரளா முழுதும் நாய்கள் மீது பீதி மட்டுமின்றி வெறுப்புணர்வும் நிலவுகிறது. பல சந்தர்ப்பங்களில் நாய் தாக்குதலின் பயங்கரமான சிசிடிவி கேமரா காட்சிகளும் வைரலாகி  வருகிறது. கோட்டயம் பகுதியில் மட்டும் 2 மாதங்களில் 40-க்கும் அதிகமானோர் நாய்கடிக்கு ஆளாகியுள்ளனர். இதே கோட்டயத்தில் ஒரேஒரு குடியிருப்பு பகுதியில் மட்டும் 12 நாய்கள் இறந்துகிடந்தது.

இதனால் இந்த நாய்களுக்கு உள்ளூர் வாசிகள் விஷம் கொடுத்து கொன்றதாக தெரிகிறது. இப்போது கேரள மக்கள் நாய்களை கொலை செய்ய வழிவகை தேடி வருகின்றனர். இந்நிலையில் கிரிக்கெட்வீரர் ஷிகர் தவான் நாய்கள் கொடூரமாக கொல்லப்படுவதற்கு எதிராக டுவிட் செய்துள்ளார். இது குறித்து தவான் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் “கேரளாவில் நாய்கள் படுகொலை செய்யப்பட்ட படங்கள் மிகவும் பயமுறுத்துவதாக இருக்கிறது. இவ்வாறான கொலைகள் தொடர்பில் மக்கள் சிந்திக்கவேண்டும். இந்த மரணங்கள் தடுக்கப்படவேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்” என கூறியுள்ளார்.

Categories

Tech |