Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொடூரமாக தாக்கப்பட்ட தி.மு.க பிரமுகர்…. 40 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை…!!

தி.மு.க கட்சியின் உறுப்பினரை  தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் தண்டையார்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தி.மு.க பிரமுகரை தாக்கியுள்ளனர். அதாவது வாக்குச்சாவடிக்குள் அனுமதியின்றி நுழைந்ததாக கூறி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஜெயக்குமார் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் சிலர் நரேஷ் என்பவரை தாக்கியுள்ளனர். இவர் தி.மு.க கட்சியை சேர்ந்தவர் ஆவார். இதில் காயமடைந்த நரேஷை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இவரை அடித்து துன்புறுத்திய காட்சிகள் வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது.

இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கமிஷனர் சுந்தரவதனம் நரேஷை  தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தண்டையார்பேட்டை காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் 40 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த டில்லி ராஜ் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பிறகு இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |