லண்டனில் 18 வயது இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டவர் விசாரணையில் ஆப்கானிஸ்தான் அகதி என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேற்கு லண்டனில் உள்ள Notting Hill பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய Hazrat Wali, உள்ளூர் நேரப்படி கடந்த 12ஆம் தேதி மாலை 4.45 மணியளவில் Twickenham-ல் உள்ள Richmond upon Thames கல்லூரிக்கு அருகில் உள்ள கால்பந்து மைதானத்தில் 8 பேர் கொண்ட குழுவினரால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். Fulham-ல் உள்ள West London Coroner’s என்ற நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது Hazrat Wali-யின் மூத்த சகோதரர் உடலை அடையாளம் காட்டியதை அடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. Hazrat Wali, மே 8, 2003 இல் ஆப்கானிஸ்தானில் பிறந்த இவர் construction and building படித்து கொண்டுள்ளார். சம்பவத்தன்று மார்பு மற்றும் வயிற்றில் கத்திக்குத்து காயம் அடைந்த அவர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Hazrat Wali-யின் மூத்த சகோதரர் கடந்த 18ம் தேதி அவரது உடலை அடையாளம் காட்டினார்.
முழுமையான பிரேதப் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், விசாரணையில் Hazrat Wali பலியானதை நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக Hammersmith-ஐ பகுதியைச் சேர்ந்த 16 வயது இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டு அவரின் மீது கொலை பழி சாட்டப்பட்டு உள்ளது. எவ்வாறாயினும், சட்ட காரணங்களுக்காக அந்த இளைஞனின் முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.