Categories
உலக செய்திகள்

“கொடூரமா கொன்னாங்க” சவுதி இளவரசர் மீது வழக்கு…. இளம்பெண்ணின் துணிகர செயல்….!!

விமர்சகரை கொலை செய்ய உத்தரவிட்டதாக சவுதியின் பட்டத்து இளவரசர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2017 ஆம் வருடம் ஜமால் கஷோக்ஜி என்ற பத்திரிக்கையாளர் தாய்நாடான சவுதியை விட்டு வெளியேறி அமெரிக்காவிற்கு சென்றார். சவுதி அரச குடும்பத்தின் விமர்சகராக இருந்த இவர் துருக்கி நாட்டு பிரஜையான ஹாடீஜா என்ற பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதனால் முதல் திருமணம் விவாகரத்து செய்யப்பட்டதற்கான ஆவணங்களை பெறுவதற்காக 2018 ஆம் வருடம் சவுதியில் துணைத் தூதரகத்திற்கு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் அங்கிருந்து வெளியில் வராததால் அவருக்காக காத்திருந்த ஹாடீஜா துருக்கி அரசின் கவனத்திற்கு இதனைக் கொண்டு சென்றார்.

அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தூதரகத்தின் உள்ளே பதிவான உரையாடல்களை வைத்து கஷோக்ஜி கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. ஆனால் சவுதி அரசு கஷோக்ஜி மரணம் திட்டமிட்டு நடந்தது அல்ல என்று கூறியது. இந்நிலையில் ஹாடீஜா மற்றும் கஷோக்ஜி நிறுவிய டெமோகிராசி பார் தி அரப் வேர்ல்டு நவ் என்ற அமைப்பு வாசிங்டனில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் ஹாடீஜா தனது வாழ்க்கையிலும் பொருளாதாரத்திலும் பெரும் இழப்பு ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். கஷோக்ஜியின் மரணம் தங்கள் செயல்பாடுகளை பாதித்ததாக டெமோகிராசி பார் தி  அரப் வேர்ல்டு நவ் தெரிவித்துள்ளது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |