கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் நம் நாட்டில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டில் கடந்த 2021-ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 31,000 பதிவாகி இருப்பதாகவும், 2014-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பார்த்திராத எண்ணிக்கையாக இது இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பேசியிருப்பதாவது, நாட்டில் 2021-ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 31,000 அளவுக்கு பதிவாகியுள்ளது.
இதில் பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் உத்திரப்பிரதேசத்தில் பதிவாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 31,000 வழக்குகளில் 11,000 வழக்குகள் மரியாதையுடன் வாழ்வதற்கு உரிமையின் கீழ் அதாவது, பெண்களுக்கு உணர்வுபூர்வமாக பாதிப்பை ஏற்படுத்துதல் போன்றவை அடங்கும். 6,633 வழக்குகளும் வரதட்சனை கொடுமை என்ற அடிப்படையில் 4,589 வழக்குகளும் பதிவாகியுள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் 15,708 ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து டெல்லியில் 3,336 மகாராஷ்டிரத்தில் 1,504 ஹரியானாவில் 1,460 மற்றும் பீகாரில் 1,456 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.