Categories
தேசிய செய்திகள்

கொடூரம்… கோயிலுக்கு சென்ற தலித் குடும்பத்தினர் மீது… கொலைவெறித் தாக்குதல்…!!!

கோவிலுக்குள் சென்ற தலித் குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் காந்திதாம் கிராமத்தில் ஒரு ராமர் கோவில் உள்ளது. இங்கு வழிபாடு செய்வதற்கு தலித் குடும்பம் ஒன்று உள்ளது. இதை பார்த்த மேல் ஜாதியினர் அந்த குடும்பத்தில் இருந்து வந்திருந்த 6 பேரையும் மிக மோசமான வார்த்தைகளால் திட்டியது   மட்டுமல்லாமல் கொடூரமாக தாக்குதலும் நடத்தியுள்ளனர். மேலும் தலித் குடும்பத்தினர் வைத்திருந்த செல்போன் மற்றும் அவர்கள் வந்த ரிக்ஷா உள்ளிட்டவற்றை உடைத்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

இதுதொடர்பாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் 5 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜாதியை காரணமாக வைத்து இது போன்ற சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |