Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொடூரம்…!! “தாயை” உயிருடன் கழிவு நீர் தொட்டியில் போட்டு மூடிய நபர்…. விழுப்புரத்தில் பரபரப்பு சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் கிராமத்தில் ராஜகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அசோதை என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சக்திவேல் என்ற மகனும், செல்வி என்ற மருமகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சக்திவேல் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் செல்வி தனது குழந்தைகளோடு பெங்களூருக்கு சென்று விட்டார். இரவு நேரத்தில் அசோதை மண்ணம்மாள் என்பவரது வீட்டிற்கு சென்று தங்கி வந்துள்ளார். நேற்று முன்தினம் அசோதை மண்ணம்மாளின் வீட்டிற்கு சென்ற போது சக்திவேல் தனது தாயுடன் தகராறு செய்து வலுக்கட்டாயமாக அவரை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். நேற்று அக்கம் பக்கத்தினர் அசோதையை தேடி வீட்டிற்கு சென்ற போது சக்திவேல் மட்டும் இருந்துள்ளார்.

அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சக்திவேலிடம் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது இரவு நேரத்தில் சக்திவேல் தனது தாயிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என அசோதை கூறியதால் கோபமடைந்த சக்திவேல் தனது தாயின் கன்னத்தில் அறைந்ததால் அவர் மயங்கி விழுந்தார்.

நீண்ட நேரமாகியும் அசைவு இல்லாததால் தனது தாய் இறந்து விட்டார் என நினைத்து உயிரோடு இருந்த மூதாட்டியை வீட்டின் பின்புறம் இருக்கும் கழிவுநீர் தொட்டியில் போட்டு மூடி விட்டதால் அவர் இறந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிந்த போலீசார் சக்திவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |