நபர் ஒருவர் தனது தாயை எரித்த நெருப்பில் கோழியை சுட்டு சாப்பிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பிரதான் சோயா. இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இவர் குடித்துவிட்டு அடிக்கடி தனது தாயுடன் சண்டையிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் தன்னுடைய தாயை அடித்துள்ளார். பின்னர் தனது தாயை அடித்துக் கொன்று அந்த உடலை வீட்டின் வாசலில் வைத்து எரித்துள்ளார். இதையடுத்து அந்த நெருப்பிலேயே கோழியை சுட்டு சாப்பிட்டுள்ளார்.
இந்த கொடூர சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் பிரதான் சோயாவை கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய செய்துள்ளது.