எல்லை பாதுகாப்பு படை வீரர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள சக்லாசி கிராமத்தில் வாஹிலா என்ற எல்லைப்பாதுகாப்பு படை வீரர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். அந்த சிறுமி தன்னுடன் படிக்கும் ஒரு மாணவனை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுவன் அந்த சிறுமியின் அந்தரங்க வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாஹிலா தனது மனைவி, 2 மகன் ஆகியோருடன் சேர்ந்து அந்த சிறுவனின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் குடும்பத்தினர் அவர்களை கூர்மையான ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த வாஹிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த அவரது மனைவி மற்றும் மகன்களை அருகில் இருந்தவர்கள் மட்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த சிறுவனின் குடும்பத்தினரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.