10 ரூபாய்க்காக நண்பனை வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு பகுதியில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதில் உயிரிழந்த வாலிபரின் நண்பருக்கு போதை பழக்கம் இருந்துள்ளது. இதனையடுத்து ஒரு நாள் அவர் உயிரிழந்த வாலிபரிடம் போதை பொருள் வாங்குவதற்கு 10 ரூபாய் தருமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபர் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் கற்களால் வாலிபரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.