Categories
தேசிய செய்திகள்

கொடூர கொரோனா தொற்று…. எந்த வயதினரையும் விடல…. பிறந்து 14 நாள் ஆன குழந்தை பலி…!!

கொரோனா தொற்றுக்கு பிறந்து 14 நாளே ஆன குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதலில் பரவிய தொற்றினால் குழந்தைகளும் முதியவர்களும் அதிக அளவில் பாதிக்கப்படும் அபாயம் இருந்து வந்தது. ஆனால் தற்போது பரவிவரும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக நடுத்தர வயது உடையவர்களிடமே காணப்படுகிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்திலுள்ள சூரத்தில் 14 நாட்களே ஆன பிஞ்சுக் குழந்தை கொரோனா தொற்றிற்கு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. உடல்நல பாதிப்பு ஏற்பட்ட குழந்தைக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின் சூரத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை கொடுத்தும் குழந்தை உடலின் உறுப்புகள் செயலிழந்து பரிதாபமாக உயிரிழந்தது.

இதே போன்று சூரத்தில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகின்றது. அரசு ஊழியராக பணியாற்றி வரும் 26 வயது உடையவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது கொரோனா வைரஸ் அனைத்து வயதினரையும் தாக்கக்கூடியது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

Categories

Tech |