Categories
தேசிய செய்திகள்

கொடூர கொலை… கணவனின் தலையை துண்டித்து… கோயில் முன் வைத்த பெண்… காரணம் என்ன…?

பெண் ஒருவர் தன் கணவரின் தலையை துண்டித்து கோவில் முன்பு வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலம் ஹொவை மாவட்டம் இந்திரா காலனி கிராமத்தை சேர்ந்தவர் ரபிந்திர தண்டி (வயது 50). இவருக்கு 42 வயதில் மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில், இந்திரா காலனி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் ரபிந்திர தண்டி தனது மனைவி மற்றும் மகன்களுடன் நேற்று இரவு உறக்கிக்கொண்டிருந்தார். அப்போது ரபிந்திர தண்டியின்  மனைவி தன் கையில் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை வைத்து கணவனை கொலை செய்தார்.
மேலும் தலையை தனியாக துண்டித்து எடுத்து பையில் வைத்துக் கொண்டுள்ளார். அப்போது தந்தை அலறல்  சத்தத்தை கேட்ட இரண்டு சிறுவர்களும் கூச்சலிட்டுள்ளனர். இதனால் கணவரின் துண்டிக்கப்பட்ட தலையை எடுத்து கொண்ட அந்த பெண் வீட்டை விட்டு உடனடியாக வெளியேறி உள்ளார். அதன்பின் அந்த துண்டிக்கப்பட்ட தனது கணவனின் தலையை தங்கள் குடும்ப  கோயில் முன் வைத்து பின் அங்கிருந்த அறைக்குள் சென்று அந்த பெண் கதவை பூட்டிக் கொண்டு இருந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கணவரை கொலை செய்து தலையை துண்டித்து கோவில் வைத்த  பெண்ணை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் அந்த பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |