மெக்சிகோவில் இருதரப்பினரிடையே நடந்த மோதலில் 10 பேர் உயிரிழந்தது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மெக்சிகோவிலுள்ள நகர் பகுதிகளில் அடிக்கடி போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலில் கடத்தல்காரர்கள் பலரும் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் தற்போதும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கிடையே நடந்த மோதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இவர்களுடைய உடல்கள் ஒரு வாகனத்தில் கிடைத்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.