தெலுங்கில் வெளியான உப்பெனா படத்தில் விஜய் சேதுபதியின் ஓபனிங் காட்சியை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் ரஜினி, விஜய், சிம்பு, மாதவன் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் போட்டி போட்டு நடித்து அசத்தியுள்ளார். சமீபத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது விஜய்சேதுபதி பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
https://twitter.com/NetflixIndia/status/1383787399944314880
மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாது பல மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பெனா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சில நாட்களுக்கு முன் இந்தப் படம் நெட்பிளிக்ஸில் வெளியானது . இந்நிலையில் உப்பெனா படத்தில் விஜய் சேதுபதியின் ஓபனிங் காட்சியை நெட்ப்ளிக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.