Categories
தேசிய செய்திகள்

கொடூர வெயில்…! மஞ்சள் அலெர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு அதிக வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த சில தினங்களுக்கு இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் அதிகமான வெப்ப அலை வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் முதன் முறையாக குஜராத் மாநிலத்தில் வெயில் 41.5 டிகிரி செல்சியஸை  கடந்துள்ளது. இதனால் இந்திய வானிலை ஆய்வு மையம் குஜராத்துக்கு மஞ்சள் கொடுத்துள்ளது.

மேலும் அகமதாபாத், சுரேந்தர் நகர் உள்ளிட்ட 10 நகரங்களில் உள்ள பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதையடுத்து வரும் நாட்களிலும் வெயிலின் அளவானது அதிகரிக்க கூடும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |