கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு உள்நாடு மட்டும் இன்றி வெளி நாட்டிலிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மோட்டார் சைக்கிள், பேருந்து, கார் போன்றவற்றில் வருகின்றனர்.
இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென சாரல் மழை பெய்துள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடியே சுற்றுலா இடங்களை கண்டு ரசித்துள்ளனர். இதனையடுத்து சால்வை விற்பனை செய்யும் கடை மற்றும் உணவகங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.