கொடைக்கானல் மோயர் பாயிண்ட்டில் வைக்கப்பட்ட காட்டெருமை சிலை சுற்றுலா பயணிகளை மிகவும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்று கொடைக்கானல். இங்கு வனபகுதி இருக்கின்ற குணாகுகை, மோயர் பாயிண்ட், பேரிஜம் ஏரி, பில்லர்ராக், பைன்மரக்காடு உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் இருக்கின்றன. இந்நிலையில் மாவட்ட வன அலுவலர் தீலிப் ஆலோசனையின்படி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுற்றுலா இடங்களை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. அதன்படி மோயர் பாயிண்ட் பகுதியில் இரும்பு, கான்கிரீட் கலவையால் செய்யப்பட்ட காட்டெருமை சிலை தற்சமயம் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலை சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்தது. இதனால் இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் காட்டெருமை சிலை முன் செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது, இதேபோன்று வனவிலங்குகளின் சிலைகளை எல்லா சுற்றுலா இடங்களில் பொதுமக்கள் பார்த்து ரசிக்கின்ற வகையில் வைக்க வேண்டும். இதனையடுத்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் கவர்கின்ற வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களையும் சுற்றுலா இடங்களில் வைக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, கொடைக்கானல் மேயர் பாயிண்டில் தற்சமயம் வைக்கப்பட்ட காட்டெருமை சிலை போன்று மற்ற வன விலங்குகளின் சிலை பல்வேறு சுற்றுலா இடங்களில் வைக்கப்படவுள்ளது. இதற்கு கேரளாவை சேர்ந்த சிற்பக்கலைஞர் வரவழைக்கப்பட்டு அவர் மூலம் சிலை வைக்கப்படவுள்ளது என்று தெரிவித்தார்.