கொடைக்கானலில் நாளை முதல் சுற்றுலா தலங்கள் திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் நிலை காரணமாகவும் தமிழகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டது. குறிப்பாக கொடைக்கானல், ஊட்டி போன்ற குளிர் பிரதேசங்களுக்கு செல்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் சூழலில் சுற்றுலா தளங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த கொடைக்கானலில் சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், குணா குகை, தூண்பாறை, பைன் மரக்காடு ஆகியவை நாளை முதல் திறக்கப்படும் என்று வனத்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.