தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு ஊழல்கள் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் தொலைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்ட பிறகு ஊருக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா மற்றும் ரோஜா பூங்கா ஆகிய பூங்காக்களுக்கு செல்வதற்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதனைப்போலவே கொடைக்கானல் சுற்றுலா வளர்ச்சி கழக படகு இல்லங்களில் உள்ள படகுகளில் சவாரி செய்வதற்கும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது