சீனாவை சேர்ந்த ஏர்லைன்ஸின் போயிங் 747 என்னும் சரக்கு விமானம் சிகாகோவில் தரையிறங்கும்போது கொட்டிக்கிடந்த பனியினால் வழுக்கி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்புடைய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
சீன நாட்டை சேர்ந்த ஏர்லைன்ஸின் போயிங் 747 என்னும் சரக்கு விமானம் அமெரிக்காவிலுள்ள சிகாகோ விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவினால் சிகாகோ விமான நிலையத்தின் ஓடுதளத்தில் பனி கொட்டி கிடந்துள்ளது.
இந்நிலையில் அந்த விமானம் தரையிறங்கும்போது கொட்டிக் கிடந்த பனியில் விமானத்தின் சக்கரம் சறுக்கி கொண்டு சென்றுள்ளது.
இதனையடுத்து அந்த விமானம் அங்கிருந்த பொருட்களின் மீது பயங்கரமாக மோதியதால் அதனுடைய இஞ்சின் கடுமையாக சேதமாகியுள்ளது.
இதுதொடர்பான வீடியோவை விமான நிலைய அதிகாரிகள் இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள்.