தமிழகத்தில் கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் அடுத்தடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நாளை (11.11.2022) திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, சென்னை, வேலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தஞ்சாவூர், நாகை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறையை அறிவித்துள்ளனர். எனவே நாளை மொத்தமாக 9 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.