கன்னியாகுமரி மாவட்டத்தில் சென்ற சில நாட்களாக மழைபெய்து வருகிறது. நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணிநேர நிலவரப்படி மாம்பழத்துறை ஆற்றில் 2.2 மி.மீட்டரும், அடையாமடையில் 3.2 மி.மீட்டரும், ஆனைக் கிடங்கில் 3 மி.மீட்டரும் மழை பதிவாகியது. மலையோர மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழைபெய்து வருவதால் அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
இதனிடையில் பேச்சிப் பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு வினாடிக்கு 1,150 கனஅடி தண்ணீர் வருகிறது. அணைகளிலிருந்து வினாடிக்கு 753 கன அடி நீரானது திறந்துவிடப்பட்டு உள்ளது. அத்துடன் முக்கடல் அணைக்கு வினாடிக்கு 8.6 கனஅடி நீர் வரத்தும், அதே அளவு நீரும் வெளியேற்றப்பட்டது.