கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு சீனாவில் ஏற்பட்ட திடீர் கனமழையினால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேரைக் காணவில்லை என்று சீன அரசு ஊடகம் நேற்று தகவல் தெரிவித்துள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் சுமார் 250 மில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
சீனா நாட்டில் கிங்காய் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள டதோங் பகுதியில் பெய்த பெருமழையால், மலைப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு ஆற்று வெள்ளம் ஊருக்குள் பாய்ந்தது. இதனால் 6 கிராமங்களில் உள்ள 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக 36 பேரைக் காணவில்லை என்று அறிவித்த மீட்புப் பணியாளர்கள், அவர்களில் 18 பேரை அதிகாலையில் கண்டுபிடித்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.