Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை… சாலையில் விழுந்த பாறாங்கற்கள்… சுற்றுலா பயணிகள் அவதி..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் நேற்று முன்தினம் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் கொடைக்கானலில் வெயில் வெளுத்து வாங்கியது. இருந்தாலும் குளிர்ந்த காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகளுக்கு வெப்பத்தின் தாக்கம் அவ்வளவாக தெரியவில்லை. வானில் கருமேக கூட்டங்கள் மாலை திரண்டு நகரின் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்தது.

பாம்பார் அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர் சோலா அருவி உள்ளிட்டவற்றில் கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நட்சத்திர ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது. சுற்றுலா பயணிகள் கொட்டும் மழையில் சுற்றுலா இடங்களை பார்வையிட்டனர். பலத்த மழை காரணமாக வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பாறாங்கற்கள் மழை காரணமாக உருண்டு சாலையில் விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமத்திற்குள்ளானர். மக்களின் இயல்பு வாழ்க்கை மழை காரணமாக பாதிக்கப்பட்டது.

Categories

Tech |