உடா மாகாணத்தில் பெய்த கனமழையின் காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.
அமெரிக்கா நாட்டில் உடா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மோவாப் பகுதியில் கடைகளுக்குள் புகுந்த வெள்ள நீரால் வியாபாரம் பாதிக்கப்பட்டு கடை உரிமையாளர்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்த வெள்ள நீரை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட சில சாலைகள் மற்றும் பாலங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளதாக மோவாப் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.