பிரேசிலில் நேற்று முன்தினம் பெய்த பேய் மழையால் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்ன அமெரிக்காவின் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ மாநிலத்தில் நேற்று முன்தினம் இடைவிடாத கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழை 30 நாட்கள் பெய்ய வேண்டியது ஆனால் 3 மணி நேரத்தில் பெய்துள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள். இதனை தொடர்ந்து பெரும்பாலான நீர்நிலைகளில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த பேய் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மலைப் பிரதேசமான பெட்ரோபோலிஸ் பிராந்தியம் இந்த கனமழையால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. மேலும் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாலைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான கால்நடைகளும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டன. இதனை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகின. இந்நிலையில் பெட்ரோலியத்தின் பல பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.