Categories
தேனி மாவட்ட செய்திகள் வானிலை

கொட்டி தீர்த்த மழை!… நிரம்பியது வைகை அணை…. சீறிப்பாய்ந்த தண்ணீர்…..!!!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் 71 அடி உயரம்கொண்ட வைகை அணை இருக்கிறது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற 5 மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. இந்நிலையில் தேனியில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக வைகைஅணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளி மலை, அரசரடி, மூலவைகை, கொட்டக்குடிஆறு போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. அத்துடன் முல்லைப் பெரியாறு அணையிலிருந்தும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து, வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. சென்ற வாரம் 60 அடியாக இருந்த அணையின் நீர்மட்டமானது நேற்று 69 அடியை எட்டியது.

அதனை தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் இன்றுகாலை அணையின் நீர்மட்டமானது 70 அடியை எட்டியது. பொதுவாக வைகை அணையின் முழுகொள்ளளவு 69அடியாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்தமுறை பல இடங்களில் மழை பரவலாக பெய்திருப்பதால் வைகை அணையின் நீர்மட்டத்தை 70 அடியாக உயர்த்த பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த வகையில் அணையின் நீர்மட்டமும் 70 அடியை எட்டியது. அதன்பின்  பாதுகாப்பு நலன்கருதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க முடிவுசெய்யப்பட்டது. அதாவது அணையின் நீர் மட்டம் 70 அடியாக உயர்ந்த சில மணிநேரங்களில் தண்ணீர் திறக்கப்பட்டபோது அணையின் பிரதான 7 மதகுகள் வழியாக உபரிநீர் சீறிப் பாய்ந்தது.

முதல் கட்டமாக வினாடிக்கு 1,190 கன அடி தண்ணீரானது வைகை அணையின் பிரதானமதகுகள் வழியே திறக்கப்பட்டது. அடுத்ததாக உபரி நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு வினாடிக்கு 2,650 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் தண்ணீர் திறப்பதற்கு முன்னதாக வைகைஅணையில் பொருத்தப்பட்டு உள்ள அபாயசங்கு 3முறை சத்தமாக ஒலிக்கப்பட்டது. இதனிடையில் வைகை அணையானது முழுக்கொள்ளளவை எட்டி இருப்பதால் உபரி நீர் திறப்பு தொடர்பாக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற 5 மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுப்பணித் துறை சார்பாக ஏற்கனவே கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதாவது உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால் 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரை ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |