Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை!…. வெறிச்சோடி காணப்பட்ட புராதன சின்னங்கள்…. பாதிப்படைந்த சுற்றுலா தொழில்….!!!!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்ல புரத்தில் சென்ற 3 தினங்களாகவே மழை விட்டு விட்டு பெய்துவருகிறது. நேற்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால் மாலை வேளையில் சுற்றுலாபயணிகள் அதிகளவில் வருவார்கள் என சுற்றுலாத்துறை, தொல்லியல்துறை எதிர்பார்த்தனர். ஆனால் தொடர் மழையால் பயணிகள் இன்றி புராதனசின்னங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக் கல் பாறை, கடற்கரை கோவில், ஐந்து ரதம், புலிக்குகை ஆகிய முக்கிய சுற்றுலா பகுதிகளில் சாலையோரம் வியாபாரம் செய்வோர், வழிகாட்டிகள், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பாசிமனி விற்போருக்கு மழையால் தொழில் பாதிக்கப்பட்டது. இன்றும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு சாரல் மழை பெய்தது. இதனால் இன்னும் சுற்றுலாத்தொழில் பாதிக்கப்பட்டது.

Categories

Tech |