சென்னையில் நேற்று காலையில் 10 மணிநேரத்திற்கும் கூடுதலாக தொடர் கனமழை பெய்தது. இந்த மழை எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, அடையாறு, பெருங்குடி, சென்ட்ரல், பூந்தமல்லி, தி.நகர், சேத்துப்பட்டு, கோயம்பேடு, வளசரவாக்கம், மீனம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், சேப்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்தது.
இதைதவிர கடலோரம் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. இவ்வாறு திடீரென பெய்த கனமழையால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர். இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி காணப்படுகிறது. இந்நிலையில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் கொண்டு வெளியேற்றும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
இதில் சென்னை தி.நகர், மேற்கு மாம்பலத்தில் பல்வேறு இடங்களிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 32 மின்மாற்றிகளில் மின்விநியோகமானது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கியிருப்பதன் அடிப்படையில் 1 மணிநேரத்தில் மின்வினியோகம் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது