மக்கள் ஆன்மீகம் சார்ந்த பண்பாடு மற்றும் ஐதீகத்தை இன்னும் வழக்கமான நிகழ்வாக எண்ணி முறையாக அனுசரித்து வருகின்றனர். அதில் மிக முக்கியமானது கடவுள் நம்பிக்கை.
கடவுள் நம்பிக்கையால் பலர் தங்களுக்கு தானே புதிய கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்கின்றன. உடல்சார்ந்த ஆரோக்கியமாகவும், பல்வேறு அற்புதங்களையும் நிகழ்த்தி வருகின்றனர். இவையெல்லாம் தவிர இன்னும் சில அற்புதமான நிகழ்ச்சிகள் நடைபெற்று தான் வருகின்றது. அதுமட்டுமில்லாமல் நமக்கு மிகப்பெரிய தத்துவமாக விளங்கும் எங்கும் கடவுள், எந்த இடத்திலும் கடவுள், அனைத்தும் கடவுள் என்ற மரபை நாம் பின்பற்றி வருகிறோம்.
நாம் கடவுளை நேரில் காண்கின்ற போது எழுகின்ற உணர்வு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அத்தகைய வகையில் கர்நாடகாவில் ஒரு அதிசயமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. ஓடும் ஆற்று படுகையில் ஆயிரம் சிவலிங்கங்கள் கிடைத்துள்ளன. இது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றது. கர்நாடாகவில் அமைந்துள்ள உத்தர் கனராவில் கர்நாடாகவின் வடபகுதி இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிருஷி எனும் இடத்தில் ஒரு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. அதில் நீர் வரத்து இருந்ததால் ஆயிரம் சிவலிங்கங்கள் தென்படுகின்றன.
அப்படி ஒரு இடத்தில் ஆயிரம் சிவலிங்கங்கள் இருப்பதை சகஸ்ரலிங்கம் என அழைக்கிறோம். லிங்கம் மட்டும் இல்லாமல் அதோடு சேர்த்து நந்தியும் இங்கு அமைந்துள்ளது. இது தெய்வீகத் தன்மை கொண்ட ஆற்று என்று அனைவரும் கூறுகின்றனர். இங்கு காணப்படும் ஒவ்வொரு சிவலிங்கத்தின் முன்பாகவும் ஒரு நந்திதேவர் செதுக்கப்பட்டு இருப்பார். அரசர் சதாசிவராயர் மறைந்த பிறகு இந்த சிவலிங்கங்கள் பெரு மழையால் சூழப்பட்டு, மூழ்க பட்டிருப்பதாக அங்கு உள்ளவர்கள் கூறுகின்றனர். இந்த அற்புதம் அங்கு இருப்பதை நாம் பார்த்து ரசிக்க முடியும்.